

தமிழக மீனவர்களை விடுவித்து இலங்கை அதிபர் ராஜபக்ச இட்ட உத்தரவை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் (தனிப்பொறுப்பு) அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி வரவேற்றுள்ளார்.
இது குறித்து நேற்று ரூடி கூறும் போது, “தமிழக மீனவர்களை விடு வித்து இலங்கை அரசு தனது நல்லெண்ணத்தை காட்டியுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ச இதற் காக காட்டிய கருணை வரவேற்கக் கூடியது.
இந்திய அரசு சார்பில் நான் மனமார வரவேற்பதுடன், மிகுந்த நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.