Last Updated : 04 Jul, 2019 03:24 PM

 

Published : 04 Jul 2019 03:24 PM
Last Updated : 04 Jul 2019 03:24 PM

டெல்லி- உ.பி. இடையே அனுமதி இன்றி இயக்கப்பட்ட 72 வாகனங்கள் பறிமுதல்

டெல்லி-உ.பி. இடையே உரிமம் இன்றி இயக்கப்பட்டு வந்த 72 தனியார் பேருந்துகளை இன்று (வியாழக்கிழமை) பறிமுதல் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து நொய்டா போலீஸார் தெரிவித்த விவரம்:

டெல்லியிலிருந்து யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் உபி வரை முறைகேடாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருவது குறித்து போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் காவல்துறையின் மாபெரும் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதற்கு ஆபரேஷன் கிளீன் 4 என்று பெயரிடப்பட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி ஐந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள், நூறு காவல்துறை அதிகாரிகள், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 70 கான்ஸ்டபிள்கள் ஆகியோர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அதிரடி சோதனையின் ஒரு பகுதியாக நேற்று மேற்கொண்ட நடவடிக்கையில் 1,174 ஆட்டோ ரிக்‌ஷாக்கள், டெம்போ வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தபோது உரிமம் இல்லாமலேயே பேருந்துகளும் இயக்குவதும் கண்டறியப்பட்டன.

இதற்காக இன்று தனியே அதிரடி வேட்டையில் இறங்கிய ஆபரேஷன் கிளீன் 4 குழுவினர் யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் சில்லா பார்டர், பாரி சவுக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர்கள் நிறுத்தப்பட்டனர்,

அப்போது அவ்வழியே வந்த டெல்லி-உபி இடையே உரிமம் இன்றி இயக்கப்பட்டு வந்த கிட்டத்தட்ட 72 தனியார் பேருந்துகள் இன்று (வியாழக்கிழமை) பறிமுதல் செய்யப்பட்டன. அப்பேருந்துகள் உரிமம் இல்லாமலும் உரிய விதிமுறைகளை பின்பற்றப்படாமல் இயக்கி வருவது தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x