

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
காஷ்மீர் சமீபத்தில் பெரும் மழை, வெள்ள பாதிப்புக்கு உள்ளானதால் அங்கு தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென்று காஷ்மீர் அவாமி தேசிய மாநாட்டு கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அனைத்து மக்களும் பங்கேற் கும் தேர்தல்தான் நியாயமான தாகவும், சிறப்பான தாகவும் இருக்கும். மழை, வெள்ள பாதிப்புகளால் காஷ் மீரில் ஏராளமான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்துவிட்டனர்.
எனவே அங்கு தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென்று அவாமி தேசிய மாநாட்டு கட்சி சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ராஜீவ் தவாண் சுட்டிக் காட்டினார்.
எனினும் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதனை ஏற்று தேர்தலை ஒத்திவைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட மறுத்துவிட்டது.
மற்றொரு வழக்கு
இதேபோல காஷ்மீருக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.44 ஆயிரம் கோடியை ஒதுக்கி உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவையும் உச்ச நீதிமன்றம் நேற்று விசாரித்தது.
அதில், எவ்வளவு நிதி வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு நாங்கள் உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
இதுவரை ரூ.1,700 கோடியை மத்திய அரசு காஷ்மீருக்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. ஆனால் மாநில அரசு ரூ.44 ஆயிரம் கோடியை கேட்டுள்ளது.