Last Updated : 17 Nov, 2014 10:02 AM

 

Published : 17 Nov 2014 10:02 AM
Last Updated : 17 Nov 2014 10:02 AM

நேரு பிறந்த நாள் மாநாடு இன்று தொடக்கம்: 54 நாடுகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு

முன்னாள் பிரதமர் நேருவின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் 2 நாள் சர்வதேச மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க பாஜக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளுக்கும் 54 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நேரு பிறந்தநாள் விழாக் குழுவினரை பிரதமர் நரேந்திர மோடி மாற்றி அமைத்தார்.

இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.

இதன் காரணமாக நேரு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதில் மத்திய அரசுக்கும் காங்கிரஸுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

மோடிக்கு அழைப்பில்லை

இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு போட்டியாக காங்கிரஸ் சார்பில் இரண்டு நாள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் பாஜக கூட்டணியில் இடம்பெறாத அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜக தலைமைக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, திரிணமூல் உள் ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப் பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

மம்தாவுக்கு சோனியா கடிதம்

மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதீஷ் குமார் ஆகியோருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த மாநாடு மூலம் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கும் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நாள்களில் கட்சி மாநாடு இருப்பதால் காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் பாஜக அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிப்பதால் சரத் பவார் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த் துள்ளார் என்று கூறப்படுகிறது.

54 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய், கானாவின் மூத்த அரசியல் தலைவர் ஜான், நேபாள முன்னாள் பிரதமர் மாதவ் கே நேபாள், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆஸ்மா ஜஹாங்கீர், தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்ட தலைவர் அகமது கத்ராடா மற்றும் ரஷ்யா, சீனா, வியட்நாம், வங்க தேசம் உள்பட 54 நாடுகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை மேற் கொள்ள ராகுல் காந்தி தலைமை யில் 9 பேர் குழு அமைக்கப்பட் டுள்ளது. இந்தக் குழுவில் ஜெய் ராம் ரமேஷ், வீரப்ப மொய்லி, அம்பிகா சோனி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x