Last Updated : 10 Jul, 2019 02:26 PM

 

Published : 10 Jul 2019 02:26 PM
Last Updated : 10 Jul 2019 02:26 PM

ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில் மோசடிகள்: காலை 8 மணிக்கு பள்ளியிலிருந்து செல்ஃபி படமெடுத்து அனுப்ப யோகி அரசு உத்தரவு

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் பள்ளிக்கு வராமலே சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் மோசடிகளைத் தவிர்க்க மேற்கு வங்க அரசு செல்பி வருகைப் பதிவு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

முதல்கட்டமாக பாராபங்கி மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

மாவட்ட கல்வி அதிகாரிகள் காலை 8 மணிக்கு பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறை முன் நின்று செல்பி படம் எடுத்து அதை பேசிக் ஷிக்ஷா அதிகாரி இணையதளப் பக்கத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்நடைமுறையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்பி அனுப்பத் தவறியவர்களுக்கு ஒருநாள் சம்பள இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மூத்த கல்வித்துறையில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

இந்த விதிமுறை ஆசிரியர்கள் செய்யும் மோசடிகளைத் தடுக்க உதவும்.

சில ஆசிரியர்கள் காலையில் தங்கள் வருகையை பதிவு செய்வதற்கு தகுதி குறைந்த நபர்களிடம் கை மாற்றி விடுவதோடு மட்டுமின்றி அவர்களையே மாணவர்களுக்கு கற்பிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். இது உத்தரபிரதேசத்தில் ஒரு நடைமுறையாக உள்ளது, பள்ளி முதல்வர்களின் ஒத்துழைப்போடு நடைபெறுவதால் அவர்களுக்கும் கணிசமான தொகை ஒரு பங்காக வழங்கப்படுகிறது.

கோடை விடுமுறைக்கு பள்ளிகள் மூடப்படுவதற்கு முன்பு, மே மாதத்தில் இந்த முறை செயல்படுத்தப்பட்டது, இந்த விதிமுறையால் இதுவரை 700 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரு நாள் சம்பளத்தை இழந்துள்ளனர்.

கணினியில் திட்டமிடும் இந்த வலைப்பின்னல் மூலம், நாங்கள் அதை மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்த உள்ளோம். முதல்வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கல்வி முறை மேம்பட வேண்டும் என்று உறுதியாக உள்ளார். எனவே கற்பித்தல் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவையில் நாம் உள்ளோம்.

இவ்வாறு மூத்த கல்வி அதிகாரி தெரிவித்தார்.

மேலும், பள்ளி நேரங்களில் சமூக ஊடக தளங்களில் உலாவுவது கண்டுபிடிக்கப்பட்டால் ஆசிரியர்கள் சம்பள வெட்டுக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அடிப்படை சிக்ஷா அதிகாரி வி.பி. சிங் தெரிவிக்கையில், "முதல்வர் மற்றும் அடிப்படை கல்வி அமைச்சரின் அறிவுறுத்தல்களின் பேரில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் ஒவ்வொருவரின் செல்பி சரிபார்க்கப்படுவதும் கண்டிப்பாக செயல்படுத்தப்படுகிறது. காலை 8 மணிக்குள் தங்கள் செல்ஃபிக்களை இடுகையிடாவிட்டால், அவர்கள் நாள் ஊதியத்தை இழக்க நேரிடும் என்று ஆசிரியர்களுக்கு குறிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

நியாயமற்றது

இருப்பினும், ஆசிரியர்கள் சிலர் இந்த புதிய விதிமுறையை 'நியாயமற்றது' என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

"நகரங்கள் போக்குவரத்து நெரிசல்கள் அதிகம் உள்ள பகுதியாகும். கிராமப்புறங்களில் பொது போக்குவரத்து எளிதில் கிடைக்காதது மற்றும் மோசமான இணைய இணைப்பு ஆகியவை செல்ஃபிக்களை இடுகையிடுவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும். என் டெம்போ ஒரு ரயில்வே கிராசிங்கில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் ஒரு நாள் சம்பளத்தை நான் இழந்தேன்.''

இவ்வாறு பரபங்கி மாவட்டம் ராம் நகரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியின் பெண் ஆசிரியை ஒருவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x