

வரும் 7-ம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், மணிப்பூர் மாநில காங்கிரஸ் கட்சி, தேசிய கட்சியான காங்கிரஸுடன் இணைந்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஒய். மங்கி கூறுகையில், "60 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டசபையில் எங்கள் கட்சிக்கு வெறும் 5 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் மாநில மக்களுக்கு பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை. எனவே தேசிய கட்சியுடன் இணைந்து விட்டோம்" என்றார்.
கடந்த ஜனவரி மாதமே காங்கிரஸுடன் இணைய மணிப்பூர் காங்கிரஸ் விருப் பம் தெரிவித்ததாகவும், வியாழக்கிழமை மாலை அதிகாரப் பூர்வமாக இந்த இணைப்பு நடைபெற்றதாகவும் காங்கிரஸார் தெரிவித்தனர். இதன்மூலம் சட்டசபையில் காங்கிரஸின் பலம் 47 ஆக அதிகரித்துள்ளது. வரும் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அங்கு தேர்தல் நடைபெறுகிறது.