

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒற்றுமைச் சிலை எனப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையில் உள்ளே அமர்ந்துள்ள பார்வையாளர் மாடத்தில் மழைநீர் கசிவு குறித்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சிலையின் மார்புப் பகுதியில் அமைந்துள்ள பார்வையாளர் மாடத்தில் மழை நீர் பெருகி வழிந்திருக்கும் காட்சிகளை அங்கு சென்றவர்கள் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
பல ஆயிரம் கோடி செலவில் எழுப்பப்பட்டுள்ள இந்த சிலையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக எழுந்துள்ள விமர்சனங்களை மாவட்ட ஆட்சியரும் சிலையின் தலைமை நிர்வாகியுமான ஐ.கே.படேல் மறுத்துள்ளார்.
பார்வையாளர்கள் சிலையிலிருந்து இடையூறின்றி இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் வகையில் அங்கு சாளரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மழை நீர் உள்ளே வருவது இயற்கையானது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்படி தண்ணீர் தேங்கினால் அதை அகற்ற சுத்தம் செய்யும் பணியாளர்கள் உள்ளதாகவும் ஐகே படேல் தெரிவித்துள்ளார்.