Published : 30 Jun 2019 21:18 pm

Updated : 30 Jun 2019 21:24 pm

 

Published : 30 Jun 2019 09:18 PM
Last Updated : 30 Jun 2019 09:24 PM

மரம் நடச் சென்ற தெலங்கானா பெண் அதிகாரியை டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் தாக்கு: வைரலான வீடியோ

தெலங்கானா மாநிலத்தை பசுமை மயமாக்கும் நோக்கத்தில் வனப்பகுதிகளில் மரங்களை நட்டு, பராமரித்து வளர்க்கும் ‘ஹரிதா ஹரம்’ என்னும் திட்டத்தை அம்மாநில அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது.

 


அவ்வகையில், கொம்மரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில் வனத்துறை ரேஞ்ச் அதிகாரி அணிதா தலைமையில் இன்று மரம் நடும் விழா நடைபெற்றது.

 

அப்போது, அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும் ஆளும் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி கட்சி பிரமுகருமான கோனேரு கண்ணப்பாவின் சகோதரரான கோனேரு கிருஷ்ணா என்பவர் தலைமையில் சிலர் கும்பலாக அங்கு வந்தனர்.

அங்கு மரம் நடவு செய்த வனத்துறையினர் மீது மூங்கில் கம்புகளால் சரமாரியாக அவர்கள் தாக்குதல் நடத்தினர். உயிர் பயத்தில் பெண் அதிகாரி அணிதா அங்கிருந்த டிராக்டர் மீது ஏறி தப்பிக்க முயன்றார்.

 

அவரை விரட்டிச் சென்றவர்கள் கனத்த மூங்கிலால் அணிதாவின் தலையில் தாக்கியதில் அவர் நிலைகுலைந்து மயங்கி சாய்ந்தார். தற்போது அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கோனேரு கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ஆளும்கட்சி ஆதரவாளர்கள் நடத்திய இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

தெலங்கானா ராஷ்ட்ரீய கட்சியின் தொண்டர்கள் அவரை பெண் என்றும் பாராமல் பெரிய தடிகளைக் கொண்டு தாக்கும் போது சில போலீஸ் அதிகாரிகள் கும்பலிடமிருந்து அவரைக் காக்க முயன்றனர், ஆனாலும் அவர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை.

 

அடி வாங்கிய போதும் அனிதா தான் அரசின் திட்டத்தையே செயல்படுத்துகிறேன் என்று கூறினாலும் விவசாயிகள் அவரைத் தாக்குவதை நிறுத்தவில்லை.

 

அனிதாவைத் தாக்கும் போது டி.ஆர்.எஸ். தொண்டர்களை ஏன் போலீஸார் கலைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

அதிகாரி தாக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகின்றன.



தெலங்கானா வனத்துறை பெண் அதிகாரி மீது தாக்குவைரல் வீடியோ

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x