Last Updated : 30 Jun, 2019 01:14 PM

 

Published : 30 Jun 2019 01:14 PM
Last Updated : 30 Jun 2019 01:14 PM

ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க வேண்டும்: மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுரை

நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் ஒவ்வொரு துளிநீரையும் சேமிக்க வேண்டும், தூய்மை இந்தியா போன்று, நீர் சேமிப்பையும் மிகப்பெரிய இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் வலியுறுத்தினார்.

கடந்த முறை ஆட்சியில் இருந்த போது ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழையும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்

மக்களைவைத் தேர்தல் வெற்றிக்குப்பின் பிரதமர் முதல் முறையாக மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று மக்களுக்கு வானொலி மூலம்  உரையாற்றினார்.  பிரதமர் மோடி இன்றைய நிகழ்ச்சியில் சர்வதேச யோகா தினம், மழை நீர் சேமிப்பு உள்ளி்ட்ட விஷயங்களை வலியுறுத்திப் பேசினார்.

கடந்த சில மாதங்களாக ஏராளமானோர் எனக்கு நீர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கடிதம் எழுதி இருந்தார்கள். மழை நீர் சேமிப்பு, தண்ணீரை சேமிப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வுஏற்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நம்முடைய கலாச்சாரத்தில் தண்ணீருக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. ரிக் வேதத்தில் தண்ணீரின் முக்கியத்துவம் ஏராளமாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளை தண்ணீர் பற்றாக்குறை பாதிக்கிறது. ஆண்டு முழுவதும் 8சதவீம் நீர் மட்டுமே மழையின் மூலம் கிடைக்கிறது என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கும் .

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜல் சக்தி அமைச்சகம் தண்ணீர் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் விரைந்து முடிவு எடுக்கும்.

கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்கள், கிராமத் தலைவர்களுக்கும் கடிதம் எழுதி, நீர் சேமிப்பு குறித்து வலியுறுத்தி, அதை சேமிக்க நடவடிக்கை எடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினேன். அவர்கள் சிறப்பாக செயல்பட்டு நீரை சேமிப்பார்கள் என்று உறுதியாகக் கூறுகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமான முறையில் மழை நீரைச் சேமிக்கிறார்கள். நம்முடைய நோக்கம் நீரை வீணாக்காமல் சேமிப்பதில் இருக்க வேண்டும், ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க வேண்டும்.

முக்கிய விஐபி.க்கள், நடிகர்கள், நடிகைகள், தண்ணீர் சேமிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாரம்பரிய முறையில் நீரை சேமிப்பது குறித்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நீர் சேமிப்பு குறித்து பல்வேறு விஷயங்களை அறிந்திருந்தால், அதை  தொண்டுநிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும்தகவல்களை பகிர வேண்டும் என நினைத்தால்,  #JanShakti4JalShakti  என்ற தளத்தில் உங்கள் கருத்துக்களை பதிவேற்றம் செய்யுங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x