

இந்திய நிறுவனங்களின் உப்பில் அபாயகரமான சயனைடு கலந் திருப்பது அமெரிக்க நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப் பூரில் இருந்து செயல்படும் உணவு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் சிவ சங்கர் குப்தா. இந்தியாவின் முன் னணி நிறுவனங்களின் உப்பில் அபா யகரமான சயனைடு கலந்திருப்ப தாக இவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் உப்பு மாதிரிகளை அமெரிக்காவின் யூட்டா மாகாணம், சால்ட் லேக் சிட்டியில் உள்ள ‘அமெரிக்கன் வெஸ்ட் அனலிட்டிக்கல் லேபரேட்டரீஸ்' ஆய்வகத்துக்கு அனுப்பினேன். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய நிறுவனங்களின் உப்பில் அபாயகரமான பொட்டாசியம் பெர் ரோசயனைடு அளவுக்கு அதிகமாக கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
உலகின் எந்த மூலையிலும் எந்தவொரு உணவுப் பொருளிலும் விஷத்தன்மையுடைய பொட்டா சியம் பெர்ரோசயனைடை பயன்படுத்த அனுமதி கிடையாது. இதனால் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சினை, சிறுநீரக பாதிப்பு, உடல் பருமன், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
அயோடின் கலந்த உப்பு உடலுக்கு நல்லது என்ற கருத்து தவறானது. இதை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக் கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த புகார் குறித்து பிரபல தனியார் நிறுவனம் வெளி யிட்ட அறிக்கையில், "உப்பில் பொட்டாசியம் பெர்ரோசயனைடு பயன்படுத்த அமெரிக்கா, ஐரோப் பிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு கிலோ உப்பில் 14 மில்லி கிராம் பொட்டாசியம் பெர்ரோசயனைடு பயன்படுத்தலாம் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்று தர நிர்ணய ஆணையம் வரம்பு நிர்ண யித்துள்ளது. அதையே நாங்கள் பின்பற்றுகிறோம். எங்கள் நிறுவன உப்பு பாதுகாப்பானது, தீங்கு அற்றது" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘உப்பு கட்டியாகாமல் இருக்க ஆன்டி கேக்கிங் ரசாயனம் சேர்க்கப் படும். அந்த வகையில் ஆன்டி கேக் கிங் ஏஜென்டாக பொட்டாசியம் பெர்ரோ சயனைடு உப்பில் சேர்க் கப்படுகிறது" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
சோதனை செய்தால் கண்டுபிடிக்கலாம் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாம் உணவு சமைக்க பயன்படுத்தும் உப்பில் அயோடின் வேதிப்பொருள் மட்டுமே கலந்திருக்கும். ஒரு சில நிறுவனங்கள் அயோடின் கலக்காத உப்பை தயாரிக்கின்றனர். மற்றபடி உப்பில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதாக எந்த புகாரும் இதுவரை வரவில்லை. உப்பு உள்ளிட்ட எந்த உணவுப் பொருட்களில் மாற்றமோ அல்லது கெடுதல் இருப்பதாக சந்தேகம் இருந்தால் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செயல்படும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். உணவு மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்படும். கலப்படம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் ஆய்வு என்ற பெயரில் சுயவிளம்பரத்துக்காக, பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். |