

மக்களவையில் நேற்று உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில்:
குழந்தை இல்லாத பெற்றோர் சட்டப்படி குழந்தைகளைத் தத்தெடுக்க வசதியாக நாடு முழு வதும் குழந்தைகள் நல மையங்கள் (சிசிஐ), சிறப்பு தத்தெடுப்பு ஏஜென்சி (எஸ்ஏஏ) ஆகியவற்றை மத்திய அரசு உருவாக்கி யுள்ளது. நாடு முழுவதும் 488 எஸ்ஏஏ மையங்கள் உள்ளன.
சிசிஐ, எஸ்ஏஏ ஆகிய மையங் களில் 8,677 குழந்தைகள் தத் தெடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. இதில் 5,033 பெண் குழந்தைகளும் அடங்கும்.
குழந்தைகளை தத்தெடுப்பதற் கான நடைமுறைகள் முழுவதும் ஆன்-லைனில் செய்யப்பட்டுள் ளன. இதை குழந்தை தத்தெடுப்பு ஆதாரத் தகவல் மற்றும் வழி காட்டி மையம் செயல்படுத்தி வருகிறது. தத்தெடுப்பதற்கான வழிமுறைகள் வெளிப்படையாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார் - பிடிஐ