

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம் நபி ஆசாத், அகமது படேல் மற்றும் சரத் யாதவ், ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் மனோஜ் ஜா ஆகி யோர் கடந்த மார்ச் 26-ம் தேதி டெல்லியில் கூட்டாகப் பத்திரிகை யாளர்களைச் சந்தித்தனர். அப் போது, ‘டிஎன்என் வேர்ல்ட்’ இணை யதளத்தில் பாஜக.வுக்கு எதிராக வெளியான வீடியோக்களைக் காட்டி கடுமையான குற்றச் சாட்டுகளை முன்வைத்தனர்.
ஆனால், ‘‘ஆதாரமில்லாத செய்தி, வீடியோக்களை குறிப் பிட்டு எதிர்க்கட்சியினர் பேசி வரு கின்றனர். இந்திய தேர்தலில் திட்ட மிட்டு அந்நிய சக்திகள் தலையீடு இருக்கிறது’’ என்று பாஜக தலை வர்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.
அதற்கேற்ப டிஎன்என் வேர்ல்ட் இணையதளம் வெளியிட்ட செய்திகள், வீடியோக்கள் ஆதாரமற்றவை என்று ‘இந்தியா டுடே’ புலனாய்வு செய்தியாளர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர்.
பாஜக.வுக்கு எதிராக செய்தி களைப் பரப்பிய பிரிட்டனைச் சேர்ந்த டிஎன்என் வேர்ல்ட் இணைய தளம், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஜூன் 3-ம் தேதி வரை செயல்பட்டுள்ளது. அதன்பிறகு இணையதளம் செயல்படவில்லை. ஆனால் இந்நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநரே லண்டனில் மசாஜ் நிறுவனத்தைத் தொடங்கியதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
டிஎன்என் வேர்ல்ட் இணைய தளத்தின் இயக்குநர் டயானா இரினா பிசின். இவர் ருமேனியா வைச் சேர்ந்தவர். இவர் முதலில் தொழில்முறை மாடல் அழகி. பின்னர் டிவி தொகுப்பாளினி யானார். தனது டிஎன்என் இணைய தளம் மூலம் இந்திய தேர்தல் குறித் தும் பாஜக மீதும் பல்வேறு புகார் களை தொடர்ந்து வெளியிட்டு வந் தார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சில நாட்களில் இந்த இணையதளம் மூடப்பட்டுவிட்டது.
தற்போது இவர் ‘ஈவா தந்திரிக் மசாஜ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார். இந்நிறுவனம், ‘நீண்டநேர பாலியல் இன்பத்தை உறுதி செய்வதற்கான மசாஜ்’ என்ற அறிவிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது.
செய்தி இணையதளத்தைத் தொடங்கி ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் பல தகவல்கள் கிடைத்ததாக கூறி இந்திய தேர்தல் நடைமுறை, பாஜக மீது கடுமையான புகார்களை வெளியிட்டு வந்தார். இவர் தற்போது திடீரென மசாஜ் நிறுவனம் தொடங்கியிருப்பது முரண்பாடாக உள்ளது. இதுதான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திடீரென தனது வர்த்தகத்தையே மாற்றியது ஏன்? செய்தி நிறுவனத்தின் இயக்குநராக இருந்தவர், மசாஜ் நிறுவனம் தொடங்கியது எப்படி போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கு தேர்தலின் போது பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவே, பிரிட்டனில் போலியான செய்தி நிறுவனத்தை (டிஎன்என் வேர்ல்ட்) தொடங்கி காங்கிரஸ் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது என்று பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் அமன் சின்கா கூறும் போது, ‘‘இந்திய ஜனநாயக நடை முறைகளில் தலையிட்டு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் டிஎன்என் வேர்ல்ட் இணையதளம் செயல்பட்டுள்ளது. தேர்தலின் போது இந்த இணையதளம் வெளி யிட்ட செய்திகள், வீடியோக்கள் அனைத்தும் பொய் என்பது தற்போது அம்லமாகி உள்ளது. இதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்த இணையதளத்தை மேற்கோள் காட்டி பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் மீதும் சந்தேகம் எழுகிறது’’ என்று கூறினார்.
இதற்கிடையில், ‘டிஎன்என் வேர்ல்ட்’ இணையதளமே கபில் சிபல் தொடங்கியதுதான் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதை கபில்சிபல் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.