ஜெய்ஸ்ரீராம் கோஷமிடச் சொல்லி தாக்கும் அமைப்புகள் சங் பரிவார் தொடர்புடையவை: ஒவைஸி பேட்டி

ஜெய்ஸ்ரீராம் கோஷமிடச் சொல்லி தாக்கும் அமைப்புகள் சங் பரிவார் தொடர்புடையவை: ஒவைஸி பேட்டி
Updated on
1 min read

'ஜெய்ஸ்ரீராம்'' ''வந்தே மாதரம்'' கோஷமிடச் சொல்லி தாக்கும் அமைப்புகள் சங் பரிவாருடன் தொடர்புடையவை என  மஜிலிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் அகில இந்தியத் தலைவர் ஒவைஸி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களை சந்தித்து பேட்டியளித்த ஒவைஸி தெரிவித்ததாவது:

''ஜெய் ஸ்ரீ ராம்','வந்தே மாதரம்' என்று சொல்லாவிட்டால் மக்கள் தாக்கப்படுகிறார்கள். இந்த சம்பவங்கள் நிற்கப் போவதில்லை. முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மட்டுமே குறிவைக்கப்படுகிறார்கள்.

இத்தகைய சம்பவங்களுக்குப் பின்னால் சில அமைப்புகள் செயல்படுகின்றன. அவை அனைத்தும் சங்க பரிவாருடன் இணைக்கப்பட்டுள்ளன.''

இவ்வாறு ஒவைஸி  தெரிவித்தார்.

நேற்று, ஒரு முஸ்லிம் சிறுவனை அடையாளம் தெரியாத சில நபர்கள் வழிமறித்து ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட வற்புறுத்தி தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவைஸி இன்று ஊடகங்களிடம் இச்சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

கான்பூரின் கிட்வாய் நகரில் உள்ள ஒரு மசூதியில் 'நமாஸ்' முடித்த பின்னர் ஒரு முஸ்லிம் சிறுவன் முகமது தாஜ் பார்ராவில் வசிக்கும் தனது வீட்டுக்குத்  திரும்பியபோது. வழியில் அடையாளம் தெரியாத சில நபர்கள் வழிமறித்து ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட வற்புறுத்தினர். சிறுவன் மறுத்த நிலையில் அச்சிறுவனை தாக்கியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in