

அமெரிக்காவில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டுக்கு ரூ.5 கோடி நிதி வழங்குவதற்கு தமிழக அரசுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 7-ம் தேதி வரை உலக தமிழ் மாநாடு நடைபெறுகிறது. சர்வதேச தமிழாய்வு சங்கத்தினர் இம் மாநாட்டை நடத்துகின்றனர்.
இதன் இணை அமைப்பாளர் களாக வட அமெரிக்காவின் தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை உள்ளன. தமிழ் மொழியை வளர்க்க வேண்டி, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளும் நிதியுதவி அளிப்பது வழக்கம்.
அந்த வகையில், கடந்த ஒன்பது முறையாக இந்த உலகத் தமிழ் மாநாட்டுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. இந் நிலையில், இந்த 10-வது மாநாட்டுக்கும் ரூ.5 கோடி நிதி வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது.
ஆனால், இந்த மாநாடு சிகா கோவில் நடைபெறுவதால் அதற்கு நிதி வழங்க, மத்திய வெளியுறவுத் துறை அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக, தமிழக அரசு சார்பில் பலமுறை கேட்கப்பட்டும், இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேசமயத்தில், இதற்கான தீவிர முயற்சியையும் அதிமுக அரசு எடுப்பதாக தெரியவில்லை.
எனவே, மாநாட்டை நடத்தும் நிர்வாகிகள் சார்பில் தமிழக அரசின் நிதியை பெறுவதற்கான அனு மதியை மத்திய அரசிடம் பெற்றுத் தருமாறு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் எம்.பி. (மதுரை) சு.வெங்க டேசனிடம் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவருமான வெங்கடேசன் கூறும்போது, ‘நிதிக்கான அனுமதி வேண்டி மத்திய வெளியுறத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன்.
இதுவரை நடைபெற்ற உலக தமிழ் மாநாடுகளுக்கு கடந்த காலங்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நிதியுதவி செய்துள்ளனர். எனவே, தற்போதைய தமிழக அதிமுக அரசும் பிரதமர் நரேந்திர மோடி யிடம் பேசி உடனடியாக அனு மதியை பெறலாம். கூட்டணியின் லாபம், தேர்தலில் மட்டும் அன்றி தமிழை வளர்ப்பதிலும் இருப்பது அவசியம்’ எனத் தெரிவித்தார்.
மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அர சுக்கு பாஜக தலைமை வகிக் கிறது. இதன் கூட்டணி உறுப்பின ராக தமிழகத்தில் ஆட்சி செய் யும் அதிமுகவும் உள்ளது. இவை இணைந்து போட்டியிட்ட மக் களவை தேர்தலில், அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்.பி.யாக ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் தமிழகத்தின் துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஆவார். எனினும், தமிழக அரசுக்காக சி.பி.எம். எம்.பி.யான வெங்கடேசன் முயற்சிப்பது வெளியுறவுத்துறை அமைச்சகத்தினரை ஆச்சரியப் படுத்தி உள்ளது.
இதனிடையே, மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க அனுமதி பெற்ற 7 பேருக்கு இன்னும் விசா அனுமதி கிடைக்கவில்லை. இதுதொடர்பான செய்தி, கடந்த 24-ம் தேதியன்று ‘இந்து தமிழ்’ நாளேட்டில் வெளியாகி இருந்தது.
இதன் எதிரொலியாக, தமிழ கத்தின் மக்களவை எம்.பி.க்கள் மாணிக்கம் தாக்கூர், எஸ்.செந்தில் குமார், கே.நவாஸ்கனி மற்றும் ஏ.செல்லக்குமார் ஆகியோர் வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து உலகத் தமிழ் மாநாட்டுக்கு செல்ல வேண்டிய மேலும் சுமார் 40 பேருக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை.இந்
ஜுன் 20-ல் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ‘பயோ மெட்ரிக்’ பதிவு முடித்தவர்கள் இன் னும் தங்கள் விசாவுக்கான நேர் முகத் தேர்வுக்கு காத்துள்ளனர்.