

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் தீவிரவாதி கொல்லப்பட்டார்.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் உள்ளக்ரால்போரா பகுதியில் தீவிர வாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், அந்தப் பகுதிக்கு போலீஸார், ராணுவத்தி னர் மற்றும் சிஆர்பிஎப் படையி னர் அடங்கிய பாதுகாப்புப் படை யினர் நேற்று சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்ட னர். இந்த துப்பாக்கிச் சண்டை யில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற தீவிர வாதிகள் தப்பியோடிவிட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. அவர்களை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.
இதனிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தீவிரவாதிகள் எதற்காக இந்த இடத்துக்கு வந்தார்கள், இங்கு ஏதேனும் சதிச் செயலில் ஈடுபட திட்டமிட்டார்களா என்பது குறித்து ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். - பிடிஐ