

பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா (பிசிஐ) புதிய தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சி.கே.பிரசாத் நியமிக்கப்பட உள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையிலான குழு பிரசாத்தை திங்கள்கிழமை தேர்வு செய்ததாகவும் இது தொடர்பான தகவல் தங்களுக்கு வந்துள்ளதாகவும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறின.
பிரஸ் கவுன்சில் தலைவராக இருந்த முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவின் பதவிக்காலம் அக்டோபர் 11-ம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.