Last Updated : 22 Aug, 2017 09:49 AM

 

Published : 22 Aug 2017 09:49 AM
Last Updated : 22 Aug 2017 09:49 AM

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: ஸ்ரீகாந்த் புரோகித்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்

.மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் கடந்த 2008-ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 7 பேர் இறந்தனர். இந்த வழக்கில் ஸ்ரீகாந்த் புரோகித்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதால் அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, “புரோகித் அரசியல் சர்ச்சையில் இழுக்கப்பட்டுள்ளார். 9 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவரது மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் சாத்வி பிரக்யா சிங், ஸ்ரீகாந்த் புரோகித் மற்றும் 9 பேருக்கு எதிராக ‘மகாராஷ்டிரா திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டம்’ தவறாக பிரயோகிக்கப்பட்டுள்ளது என சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது. -

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x