Last Updated : 25 May, 2017 08:04 AM

 

Published : 25 May 2017 08:04 AM
Last Updated : 25 May 2017 08:04 AM

முத்தலாக்கை ரத்து செய்வதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு: அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கருத்து

முத்தலாக் விவாகரத்து முறையை ரத்து செய்வதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு. இருந்தாலும், தற்போது நீதிமன்றத்தில் இப்பிரச்சினை இருப்பதால், நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கூறியுள்ளார்.

முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்டப் படி செல்லத்தக்கதா? என்ற வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆறு நாட்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜூலையில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

நிக்காநாமா எனப்படும் முஸ்லிம் திருமண ஒப்பந்தத்தின்போது, முத்தலாக் நடைமுறையை பயன்படுத்த மாட்டோம் என்று மணமகனிடம் அறிவுறுத்தும்படி, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அனைத்து காஸிக்களுக்கும் ஆலோசனை வழங்கியிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள் ளது. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எத்தனை முஸ்லிம்களின் பிரதிநிதியாக செயல்படுகிறது என்று தெரிய வில்லை. அந்த வாரியம் தெரிவித் துள்ள ஆலோசனையை எத்தனை காஸிக்கள் ஏற்றுக் கொண்டு மணமகனிடம் தெரிவிப்பார்கள் என்பதும் தெரியவில்லை.

முஸ்லிம்கள் மத்தியில் தற் போதுள்ள கல்வியறிவு நிலைமை, ஆண்களின் ஆதிக்கம் ஆகிய வற்றை கருத்தில் கொண்டால், எத்தனை மணமகன்கள் அந்த அறிவுரையை பின்பற்றுவார்கள் என்பதிலும் தெளிவு இல்லை. இந்த அறிவுரை பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்கவும் எந்த அமைப்பும் இல்லை. முஸ்லிம் களுக்கு அறிவுரை வழங்க முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. இப்படி ஒரு அறிவுரை வழங்குவதன் மூலம் தங்களை ஒரு சட்டப்பூர்வ அமைப்பு போன்று காட்டிக் கொள்ள அந்த அமைப்பு முயற்சிக்கிறது.

முத்தலாக் விவகாரத்தில் அந்த அமைப்பு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம் ஒரு கண் துடைப்பு. அதற்கு உச்ச நீதிமன்றம் எந்த முக்கியத்துவமும் அளிக்கக் கூடாது. நீதிமன்றத்தை திசைதிருப்பு வதற்காகவே முஸ்லிம் சட்ட வாரியம் இத்தகைய முயற்சியை எடுத்துள்ளது.

முத்தலாக் விவாகரத்து முறையை ரத்து செய்ய நாடாளு மன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும், தற்போது இப்பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இதன் சட்டப்பூர்வ நிலை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். ஏற்கெனவே தீண்டாமை, உடன்கட்டை ஏறுதல் (சதி) போன்ற சட்ட மீறல் நடைமுறைகளை நாடாளுமன்றம் சட்டம் இயற்றி தடை செய்தது. அதுபோன்று முத்தலாக் முறையையும் நாடாளுமன்றத்தின் மூலம் ரத்து செய்ய முடியும். ஆனால், அதற்காக இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை என்று அர்த்தமில்லை. முத்தலாக் நடைமுறையின் சட்ட அங்கீகாரம் குறித்து நீதிமன்றம் முடிவெடுத்து தீர்ப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x