Published : 14 Nov 2014 12:04 PM
Last Updated : 14 Nov 2014 12:04 PM

ராஜ்யசபா கேள்வி நேரம் மாற்றம்: புதிய நடைமுறை வரும் கூட்டத்தொடரிலேயே அமல்

ராஜ்யசபா, கேள்வி நேரம் காலை 11 மணியில் இருந்து பகல் 12 மணிக்கு மாற்றப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரம் அமைதியாக நடைபெறவும், பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில், ராஜ்யசபா கேள்வி நேரம் காலை 11 மணியில் இருந்து 12 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய நடைமுறையானது நவம்பர் 24-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இருந்து அமலுக்கு வருகிறது.

ராஜ்யசபாவில், இதுவரையில் கேள்வி நேரம், காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிவரையில் இருந்தது. தற்போது 12 மணியில் இருந்து 1 மணிவரையில் மாற்றப்பட்டுள்ளது. ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரி தலைமையிலான பொது நோக்கங்களுக்கான குழு கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த முடிவை எடுத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பான அறிவிக்கையை ராஜ்யசபா செயலர் அமைச்சர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜ்யசபாவில் தொடர்ந்து அமளி ஏற்பட்டபோது அவையை சுமுகமாக நடத்துவதற்காக தற்காலிகமாக கேள்வி நேரம் 2 மணி முதல் 3 மணி வரைக்கும் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தகக்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x