Last Updated : 03 Aug, 2017 08:09 PM

 

Published : 03 Aug 2017 08:09 PM
Last Updated : 03 Aug 2017 08:09 PM

‘ஸ்டேட் பாங்க் ஆஃப் தக்காளி’: விலை உயர்வுக்கு எதிராக உ.பி.காங்கிரஸ் நூதனப் போராட்டம்

தக்காளி விலை வானளாவ உயர்ந்ததையடுத்து உ.பி. காங்கிரஸ் நூதனப் போராட்டம்/விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.

அதாவது ஸ்டேட் பாங்க் ஆப் தக்காளி என்ற ஒன்றைத் தொடங்கி தக்காளிகளை மக்களுக்கு எளிதான முறையில் கடனாக வழங்கும் நூதன இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. மேலும் தக்காளியை டெபாசிட் செய்யும் வியாபாரிகளுக்கு ‘கவர்ச்சிகரமான வட்டி’ என்று காங்கிரஸ் ஹோதாவில் இறங்கியுள்ளது.

லக்னோவில் மால் அவென்யுவில் இளையோர் காங்கிரஸ் அலுவலகத்தில் ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் தக்காளி’ திறக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தின் 2-ம் நாளான இன்று (வியாழன்) 18 பேர் தக்காளி கடன் வாங்கினர். இது மக்களிடையே ஆர்வத்தைக் கூட்டியுள்ளது.

இந்த தக்காளி வங்கியின் தலைமை மேலாளராகச் செயல்படும் முன்னாள் செய்தித் தொடர்பாளர் அன்ஷு அவஸ்தி இந்த விழிப்புணர்வு/போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வருகிறார்.

இந்தத் திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பினால் அலிகஞ்சில் இன்னொரு கிளை திறந்திருப்பதாகத் தெரிவிட்தார் அவஸ்தி. இதுவரை 11 கிலோ தக்காளி டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்றரை கிலோ கடனாக அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடனை வாங்குவோர் ரூ.10 என்ற வீதத்தில் தவணையில் அடைப்பர்.

இந்த வங்கி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

“இது வெறும் போராட்ட உத்தி மட்டுமல்ல. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமாகும். காய்கனிகள் வானாளவ விலை உயர்ந்து வருவதை மக்களுக்கு எடுத்துக் காட்டும் விதமே இது” என்றார் அவஸ்தி.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் த்விஜேந்திர திரிபாதி கூறும்போது, தக்காளி விலை உயர்வைக் கண்டித்து நடத்தும் போராட்டம் இது. சாமானிய மக்கள் படும் அவதி குறித்து கவனத்தை ஈர்க்கவே இதனைச் செய்வதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x