Published : 03 Aug 2017 02:34 PM
Last Updated : 03 Aug 2017 02:34 PM

குஜராத் எம்எல்ஏக்கள் விவகாரம்: கர்நாடகாவில் தனியார் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு

கர்நாடகாவில் தனியார் தொழிலதிபரின் வீடு மற்றும் அவரின் குடும்பத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனையைத் தொடங்கியுள்ளது. இக்குழுமம் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் இணைந்து தொழில்புரிவது குறிப்பிடத்தக்கது.

ஹஸ்ஸன் என்னும் இடத்தில் உள்ள அக்குழுமத்தினரின் வீடுகளிலும், நிறுவனங்களிலும் புதன்கிழமை பின்னிரவில் சோதனை தொடங்கப்பட்டது.

கர்நாடகாவில் ரியல் எஸ்டேட், ஹோட்டல் மற்றும் சில தொழில்களில் இயங்கி வருகிறது எஸ்பிஜி குழுமம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூவரால் இக்குழுமம் நடத்தப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களுடனும் இக்குடும்பத்தினருக்கு நெருங்கிய பழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

3 சகோதரர்களில் ஒருவர் முன்னாள் காங்கிரஸ் அமைச்சரின் மருமகன் ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்னாள் அவர் முன்னாள் பாஜக அமைச்சருடன் செய்தித் தொலைக்காட்சி ஒன்றை இணைந்து நடத்தியுள்ளார்.

இந்நிலையில் மைசூருவைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ஹஸ்ஸனில் உள்ள பி.எம். சாலையில் புதன்கிழமை இரவில் சோதனையைத் தொடங்கினர்.

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களைத் தனக்குச் சொந்தமான விடுதியில் தங்க வைத்துள்ள கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமாருடன் தொடர்புடைய சுமார் 60 இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. அவருடன் தொடர்புடைய எஸ்பிஜி குழுமத்திலும் அதனாலேயே சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x