டோக்லாம் எல்லைப் பிரச்சினை ‘அபாயகரமான’ பரிமாணத்தை எட்டியுள்ளது: சீனா கடும் எச்சரிக்கை

டோக்லாம் எல்லைப் பிரச்சினை ‘அபாயகரமான’ பரிமாணத்தை எட்டியுள்ளது: சீனா கடும் எச்சரிக்கை
Updated on
1 min read

இந்திய ஊடகக்குழுவினர் சீனா சென்றுள்ளனர், இவர்களுடன் பேசிய சீன தூதர், இருதரப்பினரும் பரஸ்பரம் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற இந்தியாவின் முன்மொழிவு நிச்சயம் தீர்வாகாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

டோக்லாம் பீடபூமியில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு ராணுவ நடவடிக்கைதான் தீர்வாகும் என்றால் அதைச் செய்யவும் சீனா தயங்காது என்றும், இங்கு சூழ்நிலை அபாயகரமான பரிமாணத்தை அடைந்து விட்டது என்றும் இருதரப்பினரும் பரஸ்பரம் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று இந்தியா கூறியிருப்பது தீர்வுக்கானதல்ல என்றும் சீனா செவ்வாயன்று கடுமையாக எச்சரித்துள்ளது.

இந்திய ஊடக்குழுவுடன் நடந்த கலந்துரையாடலில் சீனா தெரிவித்ததாவது:

“இந்தியா தொடர்ந்து தவறான பாதையில் சென்றால் சர்வதேசச் சட்டங்களின் கீழ் எந்த நடவடிக்கையையும் எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது. அனைத்தும் கட்டுப்பாட்டில்தான் உள்ளன என்று டெல்லி தவறான அடையாளங்களை வெளிப்படுத்துவதை நிறுத்த வேண்டும்” என்று சீன தூதர் வாங் வென்லி எச்சரித்தார்.

பிரச்சினையை அமைதியாகத் தீர்ப்பதற்கான கால அவகாசம் முடிவு நிலையை எட்டுகிறது என்றும் டோக்லாம் எல்லையிலிருந்து இந்தியா தனது படையை வாபஸ் பெறுவது மட்டுமே தீர்வாகும் என்றும் வாங் வெனில் தெரிவித்தார்.

இதற்கும் முந்தைய எல்லைப்பிரச்சினைகளுக்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டிய வாங் வெனில், முன்பு டெம்சோக், சுமர் ஆகிய பகுதிகளில் சிக்கல் ஏற்பட்ட போது சீனா 15 பக்க அயலுறவு அமைச்சக அறிவிக்கையை வெளியிடவில்லை, ஆனால் இம்முறை அதனை சீனா வெளியிட்டுள்ளது.

சீன மக்கள் இந்தப் பிரச்சினையை நெருக்கமாக பின் தொடர்ந்து வருகின்றனர். இதனால் சீன அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சினையை முடித்தேயாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

சுஷ்மா ஸ்வராஜ் கூறியது போல் பரஸ்பர துருப்புகள் வாபஸ் என்பது தீர்வல்ல என்று கூறிய வாங் வெனில், “இது இந்தியப் பகுதியல்ல, சீனாவின் பிராந்திய இறையாண்மைக்குள் இந்தியா தலையிடுகிறது என்பதை நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம். இது அபாயகரமானது. இந்திய துருப்புகள் எங்கள் மண்ணில் நிற்கும் போது உரையாடல் சாத்தியமல்ல” என்றார் வாங் வென்லி.

மேலும் பூட்டான் தான் இந்திய துருப்புகளை வரவேற்றது என்பதை மறுத்த வாங் வென்லி, சீனாவிடம் பூட்டான் மிகத் தெளிவாக, இந்தியாவின் ஊடுருவல் தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டதாகக் கூறினார்.

மேலும் பிரச்சினை உள்ள பகுதி முச்சந்திப்பு பகுதியல்ல, ஜிப்மோச்சி மலைக்கு 2கிமீ தொலைவில்தான் முச்சந்திப்பு உள்ளது என்றார் வாங் வென்லி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in