Published : 01 Aug 2017 09:33 AM
Last Updated : 01 Aug 2017 09:33 AM

அரசு பள்ளி வகுப்பறையில் தூங்கிய கணக்கு ஆசிரியர் பணியிடை நீக்கம்: செல்போனில் படம் எடுத்த மாணவன் மீது பொய் வழக்கு

தெலங்கானா மாநிலத்தில் வகுப்பறையில் தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதை தனது செல்போனில் படம் எடுத்த மாணவன் மீது ஆசிரியர்கள் கொடுத்த புகாரின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம், மகபூப்நகர் மாவட்டத்தில் ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு 10-ம் வகுப்பில் இருக்கையில் அமர்ந்தபடி கணக்கு ஆசிரியர் தூங்கி உள்ளார். இதை ஒரு மாணவன் தனது செல்போனில் படம் பிடித்து, மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளான். இதுகுறித்து விசாரணை நடத்திய கல்வி அதிகாரி சம்மந்தப்பட்ட கணக்கு ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தால் சக ஆசிரியர்கள் கோபம் அடைந்து தங்களுக்கு அவமானம் ஏற்பட்டதாக கருதி உள்ளனர். பள்ளிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய அந்த மாணவனை தண்டிக்க முடிவு செய்தனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் குளிர் பானத்தில் மதுபானம் கலந்து குடித்ததாக அந்த மாணவன் மீது போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் விசாரணை எதுவும் நடத்தாமல் அந்த மாணவனை லத்தியால் அடித்தனர். இதில் அந்த மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அந்த மாணவன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அந்த மாணவனின் பெற்றோர் மற்றும் சக மாணவர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x