Last Updated : 19 Nov, 2014 10:22 AM

 

Published : 19 Nov 2014 10:22 AM
Last Updated : 19 Nov 2014 10:22 AM

சிபிஐ இயக்குநர் மீதான புகார் பொய் என்றால் வழக்கு தொடுக்கலாம்: உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் ஒப்புதல்

சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா பற்றி தம்மால் சுமத்தப் பட்ட புகார்கள் தவறு என நிரூபண மானால், அது தொடர்பாக வழக்கு தொடுக்கலாம் என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மற்றும் பொது நல வழக்கு மையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தனர்.

2ஜி ஒதுக்கீட்டு முறை கேடு வழக்கிலும் நிலக்கரி வயல் ஒதுக்கீடு ஊழலிலும் குற்றம் சாட்டப்பட்ட பல்வேறு நபர் களையும் சந்தித்துப் பேசியதாக ரஞ்சித் சின்ஹா மீது புகார் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் தலையீடு இருந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு உத்தரவிடவேண்டும் என பிரசாந்த் பூஷணும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் கோரிக்கை விடுத்தன.

ரஞ்சித் சின்ஹா தொடர்பாகத் தாம் கொடுத்த தகவல்கள் பொய் என தெரியவந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்கவும் எமது தரப்பினர் தயாராக உள்ளனர் என பூஷண் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தெரிவித்தார்.

ரஞ்சித் சின்ஹா தொடர்பான ஆவணங்களை கொடுத்தவர்கள் பெயரை வெளியிடவேண்டும் என சின்ஹா தரப்பு வழக்கறிஞர் விகாஸ் சிங் விடுத்த கோரிக்கையை ஆட்சேபித்த தவே, சின்ஹா மீது தெரிவிக்கப்பட்ட புகார்களை விசாரிக்கவேண்டும். இது பற்றி விவரம் தந்தவர்கள் பெயரை தெரிவிக்கும்படி நீதிமன்றம் வற்புறுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இதை விகாஸ் சிங் ஆட்சேபித் தார். சிபிஐ இயக்குநர் மீது பொய்ப் புகார் சுமத்தி சிபிஐ அமைப்பை ஒழிக்க பூஷண் தரப்பு முயற்சிப்பதாக கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x