சைபர் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் 8 வயது இந்திய வம்சாவளி சிறுவன்

சைபர் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் 8 வயது இந்திய வம்சாவளி சிறுவன்
Updated on
1 min read

டெல்லியில் இன்று தொடங்கும் சைபர் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் ரூபன் பால் உரையாற்ற இருக்கிறான்.

8 வயதே ஆகும் ரூபன் பால் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் கேம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளான்.

மத்திய வெளியுறவு இணை யமைச்சர் வி.கே.சிங் உட்பட சைபர் பாதுகாப்புத் துறையில் நிபுணத் துவம் பெற்ற பலரும் இந்த சைபர் பாதுகாப்பு மாநாட்டில் பேசுகின்ற னர். இதில் 8 வயது சிறுவன் ரூபனுக் கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட் டுள்ளது. இதுதொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியது:

ஹுஸ்டனில் நடைபெற்ற சைபர் குற்றத்தடுப்பு தொடர்பான மாநாட்டிலும் ரூபன் பால் பேசியுள் ளான். எனவேதான் அவர் இந்த மாநாட்டுக்கும் அழைக்கப்பட் டுள்ளார் என்று தெரிவித்தனர்.

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ரூபன் பால் கூறியது: ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் மொழிகளை கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். இப்போது எனக்கான புராஜெக்ட்டுகளை நானே வடிவமைத்துக் கொள்கிறேன் என்றான்.

ரூபன் பாலின் தந்தை மனோ பால் ஒடிஷாவை சேர்ந்தவர். 2000-வது ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.

ரூபன் குறித்து அவனது தந்தை கூறியது: சைபர் குற்றத் தடுப்பு தொடர்பாக ரூபன் பேச இருக்கும் 4-வது மாநாடு இது. இணையம், கம்ப்யூட்டர் வழியாக நடைபெறும் குற்றங்கள் குறித்து சிறுவர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது ரூபனின் விருப்பம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in