மகாராஷ்டிரம்: பாஜக-வை எதிர்த்து சிவசேனா வாக்களிக்க முடிவு

மகாராஷ்டிரம்: பாஜக-வை எதிர்த்து சிவசேனா வாக்களிக்க முடிவு
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்தில் எதிர்கட்சியாக செயல்பட சிவசேனா முடிவெடுத்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக-வுக்கு எதிராக வாக்களிக்கவுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா தலைவர் ராம்தாஸ் காதம் இதனை உறுதி செய்தார்.

“உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரிடையே நடந்த சந்திப்பின் போது சிவசேனா, எதிர்க்கட்சியாக செயல்படவுள்ளதாகவும், பாஜக-விற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஒரு மாதமாக உத்தவ் தாக்கரே பாஜக தலைவர்களை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொண்டார் ஆனால் நாங்கள் இதில் வெற்றிப்பெறவில்லை, எனவே கடைசியாக எதிர்கட்சியாக செயல்பட முடிவெடுத்தோம்” என்று ராம்தாஸ் காதம் தெரிவித்தார்.

சிவசேனாவின் இந்த முடிவு குறித்து பாஜக கூறும்போது, “எதிர்கட்சியாக அவர்கள் செயல்பட முடிவெடுத்தது துரதிர்ஷ்டவசமானது, எங்களால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது” என்று அமைச்சர் ஏக்நாத் காட்சே தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in