Published : 22 Aug 2017 09:53 AM
Last Updated : 22 Aug 2017 09:53 AM

டிஜிட்டல் போலீஸ் இணையதளம் தொடக்கம்

டிஜிட்டல் போலீஸ் இணைய தளத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார்.

தேசிய அளவிலான குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் பற்றிய புள்ளிவிவரங்களை அறிந்து கொள்ளும் வசதி இணையதளத்தின் மூலமாகவே போலீஸில் பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி ஆகியவற்றை அளிக்கும் டிஜிட்டல் போலீஸ் இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். குற்றம் மற்றும் குற்றவாளிகள் தொடர்பான தகவல் அறியும் திட்டத்தின்கீழ் இந்த புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 13,775 காவல் நிலையங்கள் பற்றியும் சுமார் 7 கோடி குற்ற நடவடிக்கைகள் பற்றியும் இந்த இணையதளத்தில் முழு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x