Last Updated : 06 Nov, 2014 08:17 AM

 

Published : 06 Nov 2014 08:17 AM
Last Updated : 06 Nov 2014 08:17 AM

பயணிகள் புகார் எதிரொலி: ரயில் பயணச்சீட்டு விற்பனை விரைவில் தனியார் மயமாகிறது

பயணிகளிடமிருந்து பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணச்சீட்டு விநியோகம் விரைவில் தனியார் மயமாகிறது.

நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அரசு பதவி ஏற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் ரயில்வே பட்ஜெட்டில், பல்வேறு ரயில் திட்டப் பணிகள், கட்டமைப்பு வசதிகள், சரக்குகளை கையாளுதல், பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவை தனியார் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக குழுக்கள் அமைக்கப் பட்டு, படிப்படியாக இந்த திட்டங் களை அமலாக்க முடிவு எடுக்கப் பட்டது. முதல்கட்டமாக பயணி களுக்கான அடிப்படை வசதிகளில் ரயில் பயணச்சீட்டு விநியோகிக்கும் பணி விரைவில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “ரயில் பயணச் சீட்டுகளின் முன்பதிவு, பயணச் சீட்டு மற்றும் உடனடி பயணச் சீட்டு ஆகியவற்றை விநியோகிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன்படி, தற்போது இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் விடுவிக்கப்பட்டு, கவுன்ட்டர்களில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பயணச் சீட்டுக்களை விநியோகிப் பார்கள். ரயில்வே ஆலோசனைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட இந்த திட்டம் நாட்டின் 16 மண்டலங்களில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது” என்றனர்.

ரயில் பயணச் சீட்டு விநியோ கிக்கும் கவுன்ட்டர்கள் போதுமான அளவுக்கு இல்லாதது, கவுன்ட் டர்கள் இருந்தும் போதுமான ஊழியர்கள் இல்லாதது ஆகிய காரணங்களால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இதன் எதிரொலியாக, கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக ஐ.ஆர்.சி.டி.சி.யின் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யப்பட்ட போதும் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அன்றாட ரயில் பயணத்துக்கான உடனடி சீட்டுகளை பெறும் வசதி, மூன்று நாட்கள் முன்னதாக கிடைக்கும்படி செய்தும் பிரச் சினை குறைந்தபாடில்லை. கடந்த பட்ஜெட்டில் அறிவித்த படி, இணையதளம் மூலமாக பெறும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எனினும், ரயில்வே பணியாளர் களால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு பயணச் சீட்டுகளை விநியோகிக்க முடியவில்லை.

எனவே தனியார் மயமாக உள்ள பயணச் சீட்டு விநியோகிக்கும் பணி ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கான டெண்டர் அறிவிப்பு விரைவில் அறிவிக் கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் பணியை செய்து வரும் ரயில்வே பணியா ளர்கள் அகற்றப்படுவார்களா அல்லது வேறு பணிக்கு மாற்றப்படுவார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x