Last Updated : 06 Aug, 2017 05:21 PM

 

Published : 06 Aug 2017 05:21 PM
Last Updated : 06 Aug 2017 05:21 PM

கேரளாவில் ஆட்சி கலைக்கப்படுமா? - ஜேட்லியின் திருவனந்தபுரம் பயணம் எழுப்பும் கேள்விகள்

கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஊழிர்கள் மீது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவருதால் ஜேட்லியின் வருகை கேரளாவில் சிபிஐ எம் ஆட்சி கலைக்கப்படுமா என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். இதன் பின்னணியில் சிபிஐ (எம்) இருப்பதாக பாஜக கருதுகிறது.

தேசிய அளவில் கவனிக்கப்பட்டுவரும் கேரள அரசியல் சூழ்நிலையை நேரில் கண்டறியும் பொருட்டு மத்திய அமைச்சர் ஜேட்லி ஒரு சிறப்பு விமானம் மூலம் திருவனந்தபுரத்தில் வந்து சேர்ந்தார். இன்று ஆர்எஸ்எஸ் ஊழியர்களை சந்தித்து ஆய்வு நடத்திவருகிறார்.

ராஜேஷ் குடும்பத்தினருடன் சந்திப்பு

திருவனந்தபுரம் அருகே ஸ்ரீகிரியில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷின் வீட்டுக்குச் சென்றார். அங்குள்ள அவரது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தார். அவரது 3 வயது மகன் மற்றும் ராஜேஷின் வயதான பெற்றோரையும் சந்தித்துப் பேசினார்.

ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் மீது சிபிஐ (எம்) கட்சிக்காரர்கள் நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக எழும் குற்றச்சாட்டுக்களை தேசிய அளவில் கவனிக்கப்படுவதற்கான ஒரு முயற்சியாகவும் ஜேட்லியின் இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.

மத்திய நிதி அமைச்சரின் இந்த சந்திப்புகளின்போது மாநில பாஜக தலைவர் குமணன் ராஜசேகரன், மற்றும் மாநில பாஜக தலைவர்கள் உடன் இருந்தனர்.

ஜேட்லி குடும்பத்தார் மற்றும் ராஜேஸின் மனைவியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தபோது, ஜூலை 29 அன்று ஒரு கும்பல் 34 வயது ராஜேஷ் தாக்கிக் கொல்லப்பட்டதாக அவர்கள் விளக்கம் தெரிவித்தனர்.

இந்த பயங்கரமான கொலைக்குப் பின்னால் சிபிஐ (எம்) ஆர்வலர்கள் இருப்பதாக பிஜேபி குற்றம்சாட்டியுள்ளது, அதை ஆளும் கட்சி மறுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில்

பாஜக உறுப்பினர்கள் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனை பற்றி எழுப்பியபோது, "கேரளா ஒரு கொலைக் களமாக மாறிவிட்டது" என்று குற்றம் சாட்டினர்.

ஆய்வு அறிக்கை

இதுகுறித்து அவர், மத்திய அரசுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜேட்லியின் கேரள பயணத்தின் பின்னணியில், பினராயி விஜயன் தலைமையில் இயங்கி வரும் கேரள அரசில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள சூழலையொட்டி அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நடவடிக்கைகளுக்கு பின்னணியாக ஆர்எஸ்எஸ் தலைமை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பயணத்தின்போது சமீப நாட்களாக சிபிஐ எம் ஆர்வலர்களின் தாக்குதலுக்குள்ளான பாஜக ஊழியர்களின் வீடுகளுக்கும் ஜேட்லி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது

கொல்லப்பட்ட சிபிஐ (எம்) ஊழியர்கள்

அரசியல் வன்முறை மீது ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஒரு தவறான பிரச்சாரத்தை பரப்புவதாக சிபிஐ எம் குற்றம் சாட்டியுள்ளது.

பா.ஜ.க.வை எதிர்த்து, மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 21 கட்சி ஊழியர்களின் குடும்பத்தினரை ஒருங்கிணைத்து சிபிஐ (எம்) தர்ணா நடத்தியுள்ளது. ஜேட்லி அவர்களையும் சந்திக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் பாஜக தலைவர் அமித் ஷா வந்து சென்றதிலிருந்தே கேரளவில் அரசியலில் வன்முறை அதிகரித்துள்ளதாக சிபிஐ (எம்) மாநில செயலாளர் கொடியோரி பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

அனைத்துக்கட்சி கூட்டம்

பா.ஜ.க. அரங்கேற்றிவரும் "அமித் ஷாவின் திட்டம்" மாநிலத்தில் வலுவாக உள்ள கட்சியின் கோட்டையின் மீது தாக்குதல் தொடுக்கும் பாஜகவின் வேலையே இது என்று பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.

தற்செயலாக, இன்று மாலை மாநிலத்தின் முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

கேரளாவில், பாஜக-ஆர்., எஸ்.எஸ் மற்றும் சிபிஐ (எம்) ஐ சேர்ந்தவர்கள் போட்டியிடும் பகுதிகளின் வீடுகளில் தொடர்ந்து இருதரப்புமே தாக்குதல் நடத்திவரும் சம்பவங்கள் தலைநகரை 'வன்முறைச் சுழற்சியில்' கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x