Last Updated : 10 Aug, 2017 07:15 PM

 

Published : 10 Aug 2017 07:15 PM
Last Updated : 10 Aug 2017 07:15 PM

வாகன காப்பீட்டை புதுப்பிக்க இனி மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

காற்றில் மாசின் அளவைக் கட்டுப்படுத்த, வாகன காப்பீட்டு புதுப்பித்தலுக்கு மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் கட்டாயம் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதாவது, வாகன உரிமையாளர், தங்கள் வாகனம் ‘மாசுக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது’ என்று சான்றிதழ் அளிக்காமல் அவரது வாகனக் காப்பீட்டை புதுப்பித்தல் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா என்பவர் 1985-ம் ஆண்டு மேற்கொண்ட பொதுநல மனுவின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர் தலைமை அமர்வின் முன் நடைபெற்றது.

மேலும் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நாட்டின் தலைநகரில் பெட்ரோல் நிலையங்களில் பியுஆர் மையங்களை, அதாவது pollution under control மையங்களை திறக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தலைநகர் டெல்லியில் செயல்பூர்வமான pollution under control மையங்களை உருவாக்க மத்திய அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையம் அளித்த ஆலோசனைகளை உச்ச நீதிமன்றம் பரிசீலித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x