Last Updated : 30 Aug, 2017 02:47 PM

 

Published : 30 Aug 2017 02:47 PM
Last Updated : 30 Aug 2017 02:47 PM

சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்கள் வாக்குவாதம்: பரிதாபமாக பலியான சிசு

அறுவை சிகிச்சை அறைக்குள் மருத்துவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிசு ஒன்று பரிதாபமாக பலியான சம்பவம் ஜோத்பூரில் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ளது உமைத் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை பிரசவ வலியுடன் வந்த அனிதா என்ற பெண் அனுமதிக்கப்பட்டார்.

அந்தப் பெண்ணுக்கு உடனடியாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், அறுவை சிகிச்சை அறையில் மயக்க மருந்து செலுத்துவது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கால தாமதத்தால் அப்பெண்ணின் சிசு இறக்க நேரிட்டது.

இது குறித்து மருத்துவமனையை நடத்திவரும் எஸ்.என்.மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அமிலால் பட் கூறும்போது, "பிரசவ வலியுடன் அனிதா என்ற பெண் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அவர், அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது மயக்க மருந்து செலுத்துவது தொடர்பாக மயக்க மருந்து நிபுணர் எம்.எல்.டாக், மகப்பேறு மருத்துவர் அசோக் நானிவால் இடையா வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் மும்முரமாக இருந்த மருத்துவர்கள் சிசுவின் இதயத் துடிப்பை கண்காணிக்கத் தவறிவிடுகின்றனர். இதற்கிடையில் நாடித்துடிப்பு படிப்படியாக குறைந்து சிசு பரிதாபமாக இறந்தது.

இச்சம்பவம் தொடர்பாக துணை மருத்துவர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு மருத்துவரின் விவரங்கள் மேலிடத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

அறுவை சிகிச்சை அறைக்குள் நடந்த இச்சம்பவத்தை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, அது தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொறுப்பை மறந்த மருத்துவர்களை பலரும் வசைபாடி வருகின்றனர்.

ஏ.என்.ஐ., செய்தித்தளத்தில் வெளியான வீடியோ..

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x