

நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் கேரள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
திலீப் ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்வது இது இரண்டாவது முறையாகும்.
கேரளாவில் பிரபல நடிகையை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், திலீப் சார்பில் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் 2-வது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தான் நிரபராதி. தன் மீது தவறாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது, அதன் பின்னணியில் மிகப் பெரிய சதி உள்ளது. தான் வேண்டுமென்றே இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளாதாகவும் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலை பார்த்ததே இல்லை எனவே தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
ஆனால், இன்று (ஆக., 29) திலீப் ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.