

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மான் வேட்டையாடியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
படப்படிப்பின்போது மான் வேட்டையாடியதாக சல்மான் கான் மீது ராஜஸ்தான் அரசு வழக்கு தொடர்ந்தது. அதில் குற்றம் சாட்டப்பட்டு அவருக்குத் தண் டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத் தில் சல்மான் கான் மேல் முறை யீடு செய்தார். தனக்கு விதிக்கப் பட்ட தண்டனையால் படப்பிடிப்புக் காக தான் பிரிட்டன் நாட்டுக்குச் செல்ல முடியாது என்றும், ஆகவே தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் முறையிட்டார். அதைத் தொடர்ந்து அவர் மீது விதிக்கப் பட்ட தண்டனைக்கு உயர் நீதி மன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய் தது. தற்போது அந்த வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.