

சுற்றுச்சூழலை பாது காக்கவும் எரிபொருள் செலவை கணிசமாகக் குறைக்கவும் ரயில்களில் பயோ டீசல் பெருமளவில் பயன்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘உயிரி எரி பொருட்கள் - 2014’ மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசிய தாவது:
இந்திய ரயில்வே துறை யில் உள்ள நாலாயிரத்துக் கும் மேற்பட்ட டீசல் என் ஜின்களுக்கு எரிபொரு ளாக பயோ டீசல் போன்ற மாற்று எரிபொருட்களை அதிக அளவில் பயன் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் டீசலை மிக அதிக அளவில் பயன்படுத்துவது ரயில்வே துறையாகும். டீசல் என்ஜின்களின் மொத்த எரிபொருள் பயன் பாட்டில் ஐந்து சதவீதம் வரை பயோ டீசல் பயன் படுத்தப்படும் என்று 2014-15-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் கூறப் பட்டது. இது அந்நிய செலா வணியை கணிசமாக மிச்சப்படுத்தும்.
டீசல் என்ஜின்கள், பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களில் பயன்படுத்தப் படுகின்றன. ஆண்டுக்கு இரண்டு பில்லியன் லிட் டருக்கும் அதிகமான டீசல், ரயில்வேயில் பயன் படுத்தப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.15,000 கோடி செல விடுகிறது.
எனவே எரிபொருள் பயன்பாட்டில் மிகச்சிறிய அளவு குறைத்தால் கூட செலவு கணிசமாகக் குறை யும். மேலும் பயோ டீசல் குறைந்த அளவே கார்பனை வெளியிடு வதால் சுற்றுச்சூழல் மாசு படுவதும் குறையும் என அமைச்சர் தெரிவித்தார்.