Published : 31 Aug 2017 09:19 AM
Last Updated : 31 Aug 2017 09:19 AM

பொதுத் துறை நிறுவனங்களுக்கும் ஓபிசி கிரீமிலேயர் முறை நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு முறை (கிரீமிலேயர்) பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று கூறும்போது, “பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஓபிசி பிரிவினர் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, ஆண்டு வருமான உச்சவரம்பு முறையை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு முதலே கிரீமிலேயர் முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் பொதுத் துறை நிறுவனங்களில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை” என்றார்.

ஓபிசி வகுப்பினர் கல்வி, அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு சலுகை பெறுவதற்காக வருமான உச்சவரம்பை ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. அதா வது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு சலுகை பெற முடியும். இனி பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவன வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரும் ஓபிசி பிரிவினருக்கும் இந்த வரம்பு பொருந்தும். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x