Published : 05 Aug 2017 11:57 AM
Last Updated : 05 Aug 2017 11:57 AM

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வெங்கய்ய நாயுடு வெற்றி

குடியரசு துணைத் தலைவர்  தேர்தலில் பாஜகவின் வெங்கய்ய நாயுடு குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நிகழ்நேரப் பதிவு நிறைவு

9.00 pm: குடியரசு துணைத் தலைவராக வரும் 11-ம் தேதி பதவியேற்கிறார் வெங்கய்ய நாயுடு. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்கிறார்.

8.30 pm: விவசாயக் குடும்பத்தில் பிறந்து குடியரசு துணைத் தலைவரானது பெருமை. ஜனநாயக மாண்புகளைக் காப்பேன். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. அதிமுக உறுப்பினர்களை வாக்களிக்கச் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி - வெங்கய்ய நாயுடு.

8.15 pm: வெங்கய்ய நாயுடுவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார்.

8.00 pm: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்ய நாயுடுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

7.15 pm: வெற்றி பெற்ற வெங்கய்யா நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார் கோபால கிருஷ்ண காந்தி. தனக்கு வாக்களித்த எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவித்தார்.

7.05 pm: வெங்கய்ய நாயுடு 516 வாக்குகள் பெற்றுள்ளார். கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகள் பெற்றார். 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கய்ய நாயுடு குடியாசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

7.00 pm:  குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மொத்தம் 98.21% வாக்குகள் பதிவாகின.

6.50 pm:  வெங்கய்ய நாயுடு 102 வாக்குகளும், கோபால கிருஷ்ண காந்தி 25 வாக்குகளும் பெற்றுள்ளனர்.  இதனால் வெங்கய்ய நாயுடு முன்னிலை வகிக்கிறார்.

6.05 pm: வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது.

4.00 pm: 3 மணியளவுவரை 96% வாக்குகள்  பதிவாகியுள்ளன.

1.45 p.m குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் மதியம் ஒரு மணிவரை 90.83 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் பார்வையாளர் முகுல் பாண்டே கூறியுள்ளார்.

1.20 p.m : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சச்சின் தனது வாக்கை பதிவு செய்தார்.

12.50 p.m:  குடியரசு துணைத் தலைவருக்கான வாக்குப் பதிவில் இதுவரை 700 ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

12.33 p.m:  மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

12.01 p.m:  மாநிலங்களவை உறுப்பினர் ரேகா ஓட்டுப் பதிவுக்கு வருகை.

11.35 p.m: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

11.14 am:  மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான், "வெங்கய்ய நாயுடுவுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

11. 00 am: மாநிலங்களவை உறுப்பினர் மேரி கோம், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வாக்களிக்க வரிசையில் காத்திருப்பு.

10.23 am: பாஜகவின் அனுராக் தாகூர், சுப்பிரமணியன் சுவாமி  ஆகியோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

10.17 am: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் , உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

10.08 am: பாஜக குடிரசுத் தலைவர் வேட்பாளர் வெங்கய்ய நாயுடு தனது வாக்கைப் பதிவு செய்தார்.

10.05 am: பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கைப் பதிவு செய்தார்.

குடியரசு துணைத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரி பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து ஆளும் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும் (68), எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தியும் (72) தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இதில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் மட்டும் வாக்களிக்க உள்ளனர்.

இந்த நிலையில் துணை குடியரசுத் துணை தலைவருக்கான வாக்குப் பதிவு காலை 10 மணியளவில் தொடங்கியது. இவ்வாக்குப் பதிவு மாலை ஐந்து மணி வரை நடைபெறும் என்றும், இதன் முடிவுகள் இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x