

இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு (இஸ்ரோ) இந்த ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் நலனுக்காகவும், அவர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் இஸ்ரோ சிறப்பாக செயல்பட்டுள்ளது.
செவ்வாய் கிரக ஆராய்ச்சி, விண்வெளி ஆய்வை அமைதிக்கான முயற்சிகளில் பயன்படுத்த வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக இஸ்ரோவுக்கு இந்திரா காந்தி அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான விருது வழங்கப்படுகிறது.