100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என்று எங்கு கூறினோம்? நாங்கள் முதிர்ச்சியற்றவர்கள் அல்ல: வெங்கைய நாயுடு

100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்போம் என்று எங்கு கூறினோம்? நாங்கள் முதிர்ச்சியற்றவர்கள் அல்ல: வெங்கைய நாயுடு
Updated on
1 min read

ஆட்சிக்கு வந்தால் ஊழலுக்கான சாத்தியத்தை குறைப்போம் என்றும் கருப்புப் பணத்தை நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வர சிறப்பு விசாரணைக்குழு அமைப்போம் என்றே தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாக வெங்கைய நாயுடு தெரிவித்தார்.

"100 நாட்களில் கொண்டு வருவோம் என்று எங்கு கூறினோம்? அவ்வளவு முதிர்ச்சியற்றவர்களா நாங்கள், 100 நாட்கள் என்று கூறும் போதெல்லாம் நடவடிக்கைகள் 100 நாட்களில் மேற்கொள்ளப்படும் என்றே பொருள்.” என்ற நாயுடு, கருப்புப்பண விவகாரம் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான் கருப்புப் பண விவகாரத்தில் முதன் முறையாக ஜூலை 2009-ல் 100 நாட்கள் என்ற பிரயோகத்தைச் செய்தார்.

கடந்த ஐ.மு.கூ ஆட்சியின் நிதியமைச்சர் கூட அயல் வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பெயர்களை வெளியிடவில்லையே என்று கூறினார் வெங்கையா நாயுடு.

2011-ஆம் ஆண்டு அயல்நாட்டில் பதுக்கப்பட்ட கருப்புப் பணம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றார் அவர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in