Published : 10 Nov 2014 05:56 PM
Last Updated : 10 Nov 2014 05:56 PM

மத்திய அமைச்சரவை மாற்றம்: புதிய அமைச்சர்களும் இலாகாக்களும்

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக 21 அமைச்சர்கள் பதவேயேற்றுள்ளனர். பாதுகாப்புத் துறை மற்றும் ரயில்வே துறை ஆகியவற்றிற்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

ரயில்வே அமைச்சராக இருந்த சதாநந்த கவுடா, மத்திய சட்டத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். புதிய ரயில்வே அமைச்சராக சுரேஷ் பிரபாகர் பிரபு இன்று அலு வலகப் பொறுப்பில் அமர்ந்தார்.

ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கு சுகாதாரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னால் ஐ.மு.கூ அமைச்சர் சவுத்ரி பிரேந்திர சிங் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறையை கூடுதலாக கவனித்து வந்த நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கூடுதலாக தகவல், ஒலிபரப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைச்சராக கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர், சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாறுபாடு துறைகளின் அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

அமைச்சர் சந்தோஷ் கங்வார் ஜவுளித்துறையை மட்டும் கவனிப்பார் என்றும், நாடாளுமன்ற விவகாரத்துறை, நீர் ஆதாரம், நதி மேம்பாடு ஆகிய துறைகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இரும்பு மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் இருந்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தெலங்கானாவைச் சேர்ந்த பண்டாரு தத்தாத்ரேயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக ராவ் இந்திரஜித் சிங் வசம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டம் மற்றும் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பொறுப்புக்கு ராவ் இந்தர்ஜித் சிங் மாற்றப்பட்டுள்ளார். வி.கே. சிங்கிடம் இருந்த வடகிழக்கு மாநில விவகாரங்கள் துறை, ஜிதேந்திர சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் ஆகிய துறைகளில் இருந்து ஜிதேந்திர சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இணை அமைச்சரக்ள் இலாகாக்கள் விவரம்:

முக்தார் அப்பாஸ் நக்விக்கு, சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையும், ராம் கிரிபால் யாதவிற்கு, குடிநீர் வினியோகம் மற்றும் துப்பரவுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரிக்கு உள்துறையும், சன்வர் லால் ஜாட்டிற்கு நீர்வள ஆதாரம், ஆறு மேம்பாடு மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்துதல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மோகன்பாய் கல்யாண்ஜி குண்டாரியாவுக்கு வேளாண்மை துறையும், கிரிராஜ் சிங்கிற்கு சிறு, மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ராம் ஷங்கர் கத்தேரியா மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சராகவும், ஒய்.எஸ்.சவுத்ரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாபுல் சுப்ரியா பரலுக்கு நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாத்வி நிரஞ்சன் ஜோதிக்கு உணவுப் பதப்படுத்துதல் துறையும், விஜய் சம்ப்லாவிற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜெயந்த் சின்காவிற்கு நிதித்துறையும், ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாபுல் சுப்ரியா பரலுக்கு நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாத்வி நிரஞ்சன் ஜோதிக்கு உணவுப் பதப்படுத்துதல் துறையும், விஜய் சம்ப்லாவிற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகம்:

விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு புதிய இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. கனரகத் தொழில் மற்றும் பொதுத்துறை இணை அமைச்சராக இருந்த அவர் தற்போது, சாலைப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மட்டும் தனிப்பொறுப்பாக கவனிப்பார். இணை அமைச்சர் பதவியில் கூடுதலாக நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத்துறையையும் நிர்மலா சீதாராமன் கவனித்து வந்தார். இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

3 பேருக்கு தனிபொறுப்புடன் கூடிய அமைச்சர் பதவி:

புதிய அமைச்சரவையில் 3 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜிவ் பிரதாப் ரூடி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை மகேஷ் ஷர்மாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x