

உத்தரபிரதேசத்தில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் தர சுகாதாரத்துறை அதிகாரி கள் மறுத்ததால் உயிரிழந்த வரின் சடலத்தை ரிக் ஷாவில், அவரது குடும்பத்தினர் எடுத்துச் சென்றது தொடர்பான வீடியோ சமூக இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பாண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராம் அஸ்ரே (44) என்பவர் இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரது சடலம் ரயில் பாதை யிலிருந்து நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அவரது குடும்பத்தினர், உடற்கூறு ஆய்வுக்காக அஸ்ரே உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் கேட் டுள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வாகனம் தர மறுக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது. இதை யடுத்து, சடலத்தை ரிக் ஷா வண்டியில் கிடத்தி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி (சிஎம்ஓ) சந்தோஷ் குமார் கூறும்போது, “அஸ்ரே குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் வாகனம் வேண் டும் என்று கேட்கவே இல்லை. எனினும், உடற்கூறு ஆய்வு முடிந்ததும், சடலத்தை எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டது” என்றார்.
இதுபோன்ற சம்பவம் நாட்டின் பல மாநிலங்களில் அடிக்கடி நிகழ்கிறது. உத்தர பிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டம், மலாக் சாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் குமார். கூலித் தொழிலாளியான இவரது 7 வயது மகள் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரி ழந்தார்.
சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வழங்குமாறு பல முறை கேட்டபோதும் மருத்துவ மனை நிர்வாகம் வழங்க வில்லை. இதையடுத்து உயிரி ழந்த சிறுமியின் சடலத்தை அவரது மாமா சைக்கிளில் கிடத்தி எடுத்து சென்றார் என் பது குறிப்பிடத்தக்கது.