Last Updated : 18 Jul, 2017 11:02 AM

 

Published : 18 Jul 2017 11:02 AM
Last Updated : 18 Jul 2017 11:02 AM

காஷ்மீரில் பணியின்போது செல்போன் பேசியதாகக் கண்டிப்பு: மேஜரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்

காஷ்மீரில் பணியின் போது செல்போன் பயன்படுத்தியதற்காக எச்சரித்த ராணுவ மேஜர் ஒருவரை ராணுவ வீரர் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திங்கள்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில் பணியிலிருந்த ஜவான் ஒருவர் தன் செல்பேசியைப் பயன்படுத்தியுள்ளார்.

இதனைப் பார்த்த ராணுவ மேஜர், வீரரிடமிருந்து செல்போனை பறிக்க முயன்றுள்ளார், இந்தப் போராட்டத்தில் செல்போனின் திரை உடைந்து போனது. ஆனால் மேஜரோ ராணுவ வீரரை கடுமையாக எச்சரித்ததோடு மறுநாள் கமாண்டிங் ஆபிஸரை வந்து பார்க்குமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த ஜவான், திரும்பிச் சென்று கொண்டிருந்த மேஜரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார், இதில் மேஜர் மரணமடைந்தார்.

இதனையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x