பாவனா கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்: நடிகர் திலீப் குமார் மீது வலுக்கும் சந்தேகம் - போலீஸார் தீவிர விசாரணை
மலையாள நடிகை பாவனா கடத்தலில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 17-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை ஒரு கும்பல் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது. இதுதொடர்பாக பல்சர் சுனி, மார்டின், விஜிஷ் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையின்போது பணத் துக்காகவே பாவனாவை கடத்திய தாக சுனி முதலில் தெரிவித்திருந் தார். பின்னர் மலையாள திரை யுலகில் தொடர்புடைய ஒரு நபருக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறினார்.
இதை வைத்து விசாரணை நடத்தியதில் நடிகர் திலீப்பின் நெருங்கிய உதவியாளர் ஒருவரை சுனி அவ்வப்போது போனில் தொடர்பு கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் கடந்த ஆண்டு நவம்பர் முதல் 2017 பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட மாதத்தில், பல்வேறு எண்களுக்கு சுனி தொடர்பு கொண்டுள்ளார்.
அந்த தொலைபேசி எண்கள் யாருடையது என விசாரணை நடத்தியதில், அவை திலீப்பின் மேலாளர் அப்புண்ணிக்கு சொந்த மானது என்பது தெரியவந்தது.
இதில் மற்றொரு திருப்புமுனை யாக, சிறையில் இருந்தபோது சுனி, திரைப்பட இயக்குநர் நதிர்ஷாவை 3 முறை தொடர்பு கொண்டுள்ளார். சுனியுடன் சிறையில் இருந்த மற்றொரு கைதியான ஜின்சன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் இந்த விவரம் போலீஸாருக்கு தெரியவந்தது. சுனியின் தொலைபேசி பேச்சை ஜின்சன் ஒட்டுக் கேட்டதில் பாவனாவை கடத்தியபோது செல்போனில் படம்பிடித்த காட்சிகள் அடங்கிய மெமரி கார்டுகளை லக் ஷயா என்ற நிறுவனத்தில் ஒப்படைத்திருந்ததும் தெரியவந்தது. இந்த தகவலை ஜின்சன் நீதிமன்றத்தில் தெரி வித்தார்.
அந்த லக் ஷயா நிறுவனம் குறித்து விசாரணை நடத்தியபோது, அது நடிகர் திலீப்பின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் நடத்தி வரும் ஆடை நிறுவனம் என தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 30-ம் தேதி அந்நிறுவனத்தில் போலீஸார் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் நடிகர் திலீப்கு மாரின் படப்பிடிப்பு தளத்தில் சுனி இடம்பெற்றிருந்த புகைப்படங் களும் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் பாவனா கடத்தல் வழக்கில் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. எனவே 2-வது முறையாக நடிகர் திலீப் மற்றும் இயக்குநர் நதிர்ஷாவிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஏற்கெனவே திலீப்பிடம் 13 மணி நேரம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
