

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் 2வது நாளாக நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, "காஷ்மீரின் தெற்கு மாவட்டமான புல்வாமாவில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் இரண்டு நாட்களாக தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் திங்கட்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இன்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குல்களில் பாதுகாப்பு படையினர் இருவருக்கும் காயம் ஏற்பட்டது" என்றார்.