

பசு பாதுகாப்பு என்கிற பெயரில் நடைபெறும் கொலை சம்பவங்கள் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிரானது என்றும், இதுதொடர்பாக தேசிய அளவிலான கொள்கையை வகுக்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாரப் பூர்வ நாளேடான ‘சாமனா’வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
பசு இறைச்சி என்பது உண்ணும் வழக்கமாகவும், வணிகம் மற்றும் வேலை வாய்ப்புக்கான இடமாக வும் இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் தேசிய அளவிலான கொள்கையை உரு வாக்குவது மிகவும் அவசியம். நேற்று வரை பசுவின் பாது காவலர்களாக இருந்த இந்துக்கள் இன்று கொலையாளிகளாக மாறிவிட்டனர்.
இந்த விஷயத்தில் சக மனிதர் களைக் கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் மோடி கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்ததை வரவேற்கிறோம். பசுவைப் பாதுகாக்கிறோம் என்று கூறிக் கொண்டு சட்டத்தைக் கையில் எடுக்க யாருக்கும் அனுமதி கிடையாது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிரானவர்கள் ஆவர். இந்துத்துவா பற்றி தெளி வான விளக்கத்தை அளித்த மோடிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், ஹரியானா, ஜார்கண்ட, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இறைச்சிக்காக மாடுகளை வேனில் ஏற்றிச் சென்றவர்களையும், மாட்டி றைச்சி உண்பவர்களையும் பசு பாதுகாப்பு என்கிற பெயரில் கும்பல் குறிவைத்துத் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடரும் இச்சம்பவங்களைக் கண்டித்து சமூக ஆர்வலர்களும், பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.