நகருக்குள் இருக்கும் சாலைகளுக்கு மதுபானத் தடையிலிருந்து விலக்கு அளிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

நகருக்குள் இருக்கும் சாலைகளுக்கு மதுபானத் தடையிலிருந்து விலக்கு அளிக்கலாம்: உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகள், மது விற்பனை நிலையங்கள், பார்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் சண்டிகர் மாநில அரசு நிர்வாகம் நகரத்திற்குள் இருக்கும் சாலைகளை இந்த உத்தரவிலிருந்து விடுவித்து அறிவிப்பாணை வெளியிட்டது.

அதாவது தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 500 மீ தூரத்திற்குள் எந்த ஒரு மதுபான விற்பனை நிலையமும் இருக்க கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை சாமர்த்தியமாக மீறும் விதமாக நகருக்குள் இருக்கும் சாலைகளை நெடுஞ்சாலையிலிருந்து விடுவித்து சண்டிகார் உத்தரவு பிறப்பித்து அங்கு மதுபான விற்பனை நடத்த வசதி செய்து கொடுத்தது என்று உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த எதிர்ப்பு மனுவை ச்ண்டிகரின் அரைவ் சேஃப்டி சொசைட்டி என்ற என்ஜிஓ அமைப்பு செய்திருந்தது. ஏனெனில் இதே அமைப்பு சண்டிகர் மாநில அரசின் அறிவிப்பாணையை எதிர்த்து பஞ்சாப், சண்டிகர் உயர் நீதிமன்றங்களில் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது, காரணம் இது எந்த சட்டத்தையும் மீறுவதாகவும் தெரியவில்லை என்று மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து அரைவ் சேஃப்டி சொசைட்டி உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

இந்த மனு மீது உச்ச நீதிமன்றம் கூறும்போது, நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்கள் குடித்து விட்டு வண்டி ஓட்டுவதன் அபாயத்தை உணர்ந்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது உண்மை. ஆனால், “நகருக்குள் இருக்கும் சாலைகளில் இந்தப் பிரச்சினைகள் இல்லை” எனவே அந்தச் சாலைகளை நெடுஞ்சாலைகளிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிடுவது புரிந்துகொள்ளக் கூடிய ஒரு வித்தியாசமே என்று கூறியுள்ளது.

இதனால் பெங்களூரு, சண்டிகர் ஆகிய நகரங்களுக்கு பெரிய சுமை குறைந்ததாகக் கருதப்படுகிறது. எனவே நகருக்குள் இருக்கும் சாலைகளை நெடுஞ்சாலையிலிருந்து விலக்கி அறிவிப்பாணை வெளியிடத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த மனு மீதான விசாரனையை ஒரு வாரத்துக்குத் தள்ளி வைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in