Published : 25 Jul 2017 14:49 pm

Updated : 25 Jul 2017 14:49 pm

 

Published : 25 Jul 2017 02:49 PM
Last Updated : 25 Jul 2017 02:49 PM

புகழ்பெற்ற விஞ்ஞானி யாஷ் பால் காலமானார்

புகழ்பெற்ற விஞ்ஞானியும், பேராசிரியருமான யாஷ் பால் உத்தரப்பிரதேசத்தில் திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 90.

அறிவியல் துறை, காஸ்மிக் கதிர்கள், உயர் ஆற்றல் இயற்பியல் மற்றும் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தவர் பால்.

சர்வதேச அளவில் பேரும் புகழும் பெற்ற யாஷ் பாலுக்கு 1976-ல் பத்ம பூஷண் விருதும், 2013-ல் பத்ம விபூஷண் விருதும் அளிக்கப்பட்டது.

தூர்தர்ஷனில் 'டர்னிங் பாயின்ட்' என்னும் புகழ்பெற்ற அறிவியல் நிகழ்ச்சியை நடத்தி வந்தார் பால். 2007 முதல் 2012 வரை டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருந்தார்.

2009-ல் இந்திய உயர் கல்வித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் குழுவுக்குத் தலைமை வகித்தவர் பால் என்பது குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞானி யாஷ் பாலின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை மாலையில் நொய்டாவில் நடைபெற உள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author