

இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவர் குடும்பத்தினரின் கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைப்பேன் என மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கட்கரி, "நான் தமிழகம் சென்றபோது, மீனவர்கள் தங்கள் உணர்வுகளை என்னிடம் தெரிவித்தனர். அதை நான் நிச்சயம் பிரதமர் மோடியிடம் எடுத்துரைப்பேன்" என்றார்.