

‘‘கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா இருந்த நிலை வேறு. இப்போது 2017-ல் இருப்பது வேறு இந்தியா’’ என்று சீனாவுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளித்தார்.
சிக்கிம் சீனா எல்லையில் இந்திய பகுதியான டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்க முயற்சித்தது. அதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். சிக்கிம் எல்லையில் ஏராளமான இந்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் பூடான் எல்லையிலும் சீனா சாலை அமைக்க முயற்சிப்பதற்கு அந்த நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ‘‘சிக்கிம் எல்லையில் உள்ள படைகளை இந்தியா வாபஸ் பெற வேண்டும். கடந்த 1962-ம் ஆண்டு சீனாவிடம் இந்திய ராணுவம் தோற்றதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று சீனா கடந்த வியாழக்கிழமை பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது.
இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியும் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘இந்தியா டுடே’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜேட்லியிடம், சீனாவின் மிரட்டல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜேட்லி பதில் அளித்த போது கூறியதாவது:
கடந்த 1962-ம் ஆண்டு இருந்த இந்தியா வேறு. இப்போது 2017-ம் ஆண்டில் இருக்கும் இந்தியா வேறு. கடந்த 62-ம் ஆண்டை நமக்கு அவர்கள் (சீனா) நினைவுப்படுத்த முயற்சித்தால், இந்தியாவின் தற்போதைய நிலை வேறு என்பதை கூற விரும்பு கிறேன். தனது எல்லைப் பகுதியில் சாலை அமைக்க சீனா முயற்சிக்கிறது என்று பூடான் அரசும் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது.
இந்திய பூடான் எல்லைப் பகுதியில் அமைந்த நிலத்தில் சாலை அமைக்க சீனா முயற்சிப்ப தாக தெளிவாக தெரிகிறது. சாலை அமைக்க சீனா தேர்ந்தெடுத்துள்ள இடம் பூடானுடையது என்பது உறுதியாகிறது. எல்லைப் பகுதி களில் பாதுகாப்பு அளிக்க இந்தியா வும் பூடானும் சில ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இவ்வாறு பாதுகாப்பு அமைச்சர் ஜேட்லி கூறினார்.