கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகாவில் தொடரும் எதிர்ப்பு

கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகாவில் தொடரும் எதிர்ப்பு
Updated on
1 min read

கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து த‌மிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து மண்டியாவில் விவசாய அமைப் பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடக அரசு கடந்த ஜூன் 29-ம் தேதியில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துள்ளது. நேற்று கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 1,200 கன அடி நீரும் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கு பாஜக, மஜத ஆகிய அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முற்றுகை போராட்டம்

முமண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையை மூடக்கோரி, கர்நாடக மாநில விவசாய சங்கத்தினரும், காவிரி நீர் பாதுகாப்பு குழுவினரும் முற்றுகை போராட்டம் நடத்தினர். மேலும் அங்குள்ள காவிரி நீர் நிர்வாக ஆணைய அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இதேபோல ரங்கப்பட்டினாவில் மைசூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து ஆர்ப் பாட்டம் நடத்தினர். அப்போது கர்நாடக முதல்வர் சித்தராமை யாவுக்கு எதிராகவும், நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

கர்நாடக விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகளின் தொடர் போராட்டம் காரணமாக காவிரி நீர் நிர்வாக ஆணைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள் ளனர். இதனிடையே கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், “உச்ச நீதிமன்றத்தில் தமிழக முறையிட்டுள்ளதால் காவிரி நீரை உடனடியாக நிறுத்த முடியாது. எனவே கர்நாடக அரசின் நிலையை புரிந்துகொண்டு, போராட்டத்தை கைவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in