

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரிகர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அம்மாநில பிரிவினைவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரிகர்கள் மீது தீவிரவாதிகள் திங்கட்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் யாத்திரிகர்கள் 7 பேர் பலியாகினர்.
இந்தத் தாக்குதல் குறித்து காஷ்மீர் பிரிவினைவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இந்தத் தாக்குதல் காஷ்மீரின் பண்பாட்டுக்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து காஷ்மீர் பிரிவினைவாதி தலைவர்களான சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "அமர்நாத் யாத்திரிகர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதால் காஷ்மீரின் நீண்ட நெடும் பண்பாட்டுக்கு எதிராக உள்ளது.
அமர்நாத் யாத்திரை பல நூற்றாண்டுகளாக அமைதியாக நடந்து வருகிறது. இது எதிர்காலத்திலும் தொடர்ந்து அமைதியாக நடைபெறும். தாக்குதலின் பலியான குடும்பங்களுக்கு எங்களின் இதயப் பூர்வ இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.